2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மீண்டு வந்தார் தவான்

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்,செய்யத் முஸ்தாக் அலி கோப்பை போட்டியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு பாரிய சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. 

இதிலிருந்து குணமடைந்து விட்ட அவர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

அதற்கு முன்பாக ரஞ்சி கிரிக்கெட்டில் ஐதராபாத்-டெல்லி அணிகள் இடையே டெல்லியில்  தொடங்கும் ஆட்டத்தில் டெல்லி அணியின் கேப்டனாக அவர் களம் இறங்குகிறார். இதையொட்டி   தவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

"இது எனக்கு புதிய தொடக்கம். முதலில் விரலில் பந்து தாக்கி காயமடைந்தேன்.

அதன் பிறகு கழுத்து, கண்ணில், அதன் தொடர்ச்சியாக முழங்காலில் காயம் ஏற்பட்டது. விளையாட்டில் காயம் அடைவது சகஜம். அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

சிறிது காலம் ஓய்வில் இருந்து விட்டு மீண்டும் விளையாடுவது என்னைப் பாதிக்கவில்லை.

எப்படி துடுப்பெடுத்தாட  வேண்டும் என்பதை நான் மறக்க வில்லை. எனது திறமை நிரந்தரமானது. மீண்டும் ஓட்டங்களைக் குவிப்பேன்.

எனக்குப் பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்த லோகேஷ் ராகுல் மேற்கிந்திய  தொடரில் சிறப்பாக விளையாடிஓட்டங்கள் குவித்தது மகிழ்ச்சி தரக்கூடியது. 

அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

என்னைப் பொறுத்தவரை நான் களம் இறங்கி எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது இலட்சியம். அதற்காக உழைக்கிறேன்.

சவால்களை எப்போதும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்கிறேன்.

போட்டிகளில் சோபிக்காவிட்டாலும் அதை கண்டு நான் தளர்ந்து விடுவதில்லை. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறேன்.

இந்த ரஞ்சி போட்டியில் என்னை ஒரு பெரிய வீரராக நினைத்துக் கொள்ளவில்லை.

அணியினருடன் இயல்பாக பழகுகிறேன்.

எனது அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்".இவ்வாறு தவான் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .