2021 மே 14, வெள்ளிக்கிழமை

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது 2013: முடிவுகள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார், தேவ அச்சுதன்

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம், தமிழியல் விருது வழங்கி வருகின்றது.

இவ்வாண்டு 5ஆவது தடவையாக 2013 ஆம் ஆண்டு வழங்கவிருக்கும் தமிழியல் விருதுக்கானமுடிவுகளை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியிட்டுள்ளது.

முடிவுகள் விபரம் வருமாறு,

உயர் தமிழியல் விருது- எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது பெறும் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி -  இரா.நாகலிங்கம் (அன்புமணி)
தமிழியல் விருது- தலா ரூபா 15,000ஃ- பணத்துடன் வவுனியூர் ஸ்ரீ இராமகிருஸ்ணா - கமலநாயகி தமிழியல் விருது பெறும் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த 14 மூத்த படைப்பாளிகள் -
• தி.ஞானசேகரன்
• சோ.பத்மநாதன்
• அராலியூர் நா.சுந்தரம்பிள்ளை
• அ.பாலமனோகரன்
• கே.எஸ்.ஆனந்தன்
• மாஸ்டர் சிவலிங்கம்
• அருள் சுப்பிரமணியம்
• அல்-அஸூமத்
• த.துரைசிங்கம்
• நிலா தமிழின்தாசன்
• கோகிலா மகேந்திரன்
• வி.தில்லைநாதன்
• சு.சண்முகவடிவேல்
•  சோ.ராமேஸ்வரன்

இனநல்லுறவு தமிழியல் விருது-ரூபா 10,000ஃ- பணத்துடன் கல்விமான் வ.கனகசிங்கம் தமிழியல் விருது பெறும் இன நல்லுறவுக்காக உழைத்த சிங்களமொழிப் படைப்பாளி –

• கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன.

ஓவியருக்கான தமிழியல் விருது- ரூபா 10,000ஃ- பணத்துடன் ஓவியர் கிக்கோ தமிழியல் விருது பெறும் சிறந்த ஓவியர் -
•ஓவியர் ரமணி

சிறந்த நூலுக்கான தமிழியல் விருது- 2012 யில் வெளிவந்த தமிழியல் விருது பெறும் சிறந்த 14 நூல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது,

•சிறுகதை- ரூபா 10,000ஃ- பணத்துடன் துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது

மாத்தளை பெ.வடிவேலன் எழுதிய அட்சயவடம் சிறுகதை, அரசஅதிபர் பூ.சங்காரவேல் தமிழியல் விருது கே.ஆர்.டேவிட் எழுதிய பாடுகள் சிறுகதை

•நாவல்- ரூபா 10,000ஃ- பணத்துடன் நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருதுகலையார்வன் கு.இராயப்பு எழுதிய உப்புக் காற்று நாவல்

• கவிதை- ரூபா 10,000ஃ- பணத்துடன் கவிஞர் எருவில் மூர்த்தி தமிழியல் விருது

ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய வல்லுவம், புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருது
எட்டியாந்தோட்டை மு.கருணாகரன் எழுதிய அவமானப்பட்டவனின் இரவு, கவிஞர் கல்லாறன் மு.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது ஸர்மிளா செய்யித் எழுதிய சிறகு முளைத்த பெண்

• சிறுவர் இலக்கியம்- ரூபா 10,000ஃ- பணத்துடன் வைத்தியாச்சாரி மீராசாஹிபு அஹமது தமிழியல் விருது கலாநிதி அகளங்கன் எழுதிய சின்னஞ் சிறிய சிறகுகள் ,ச.அருளானந்தம் எழுதிய ஆடிப்பாடும் பாடல்

• நாடகம்- ரூபா 10,000ஃ- பணத்துடன் பம்பைமடு கந்தையா - இரஞ்சிதமலர் தமிழியல் விருது
எஸ்.முத்துக்குமாரன் எழுதிய முத்துக்குமாரன் நாடகங்கள்

• ஆவணமாக்கல்- ரூபா 10,000ஃ- பணத்துடன் திருமலை லூர்து அருளானந்தம் தமிழியல் விருது
கலாநிதி செ.திருநாவுக்கரசு எழுதிய எண்ணங்களும் எழுத்துக்களும்

• சமயம்- ரூபா 10,000ஃ- பணத்துடன் சிவநெறிப் புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி தமிழியல் விருது
கு.றஜீபன் எழுதிய பெரிய புராண சூசணத்தில் சைவசித்தாந்தம்

• கட்டுரை- ரூபா 10,000ஃ- பணத்துடன் வித்தியாகீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது
திருமதி கமலாம்பிகை லோகிதராஜா எழுதிய பத்தும் பதியமும்

• மொழிபெயர்ப்பு- ரூபா 10,000ஃ- பணத்துடன் பதிவாளர்நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது
க.ஐயம்பிள்ளை தலைமையில் மொழிபெயர்க்கப்பட்ட இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு

• வரலாறு- ரூபா 10,000ஃ- பணத்துடன் பம்பைமடு நாகலிங்கம்-நல்லம்மா தமிழியல் விருது  சி.கா.கமலநாதன் எழுதிய வரணியின் மரபுரிமைகள்

ஆகிய நூல்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் ஓ.கே.குணநாதன் தெரிவித்துள்ளதுடன்  இவ்விருதுகள் 2013 ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறும் தமிழியல் விருது வழங்கும் நிகழ்வின்போது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .