S.Renuka / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோதிடத்தின் படி, உருவாகும் அங்காரக யோகம் 3 ராசிகளுக்கு பல சங்கடங்களை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஜோதிடத்தின் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அவ்வாறு செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
பெப்ரவரி 23ஆம் திகதி செவ்வாய் பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கெனவே இருக்கும் சனி பகவானுடன் இணைவதால் ‘அங்காரக யோகம்’ உருவாகிறது.
ஜோதிட ரீதியாக செவ்வாய் நெருப்பு கிரகமாகவும், சனி காற்று கிரகமாகவும் அறியப்படுகின்றனர். இந்த இரண்டு முரண்பட்ட கிரகங்கள் இணைவது சவாலான காலகட்டத்தை ஏற்படுத்தும். அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகம் சிக்கல்களை உருவாக்கும். பிப்ரவரி 22 ஆம் தேதி வரையிலான காலம் சாதகமாக இருக்கும். பிப்ரவரி 23-க்கு பிறகு நிலைமை மாறலாம். வேலையில் தடைகள், தொழில் தொடர்பான மன அழுத்தம் அதிகரிக்கும். நிதிநிலை மந்தமாகும். எதிர்பாராத செலவுகள் கூடும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் மற்றும் கூட்டாண்மை தொடர்பான ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாவதால் கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.
மகரம்: மகர ராசிக்காரர்கள் நிதி மற்றும் தொழில் ரீதியாக கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையில் அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
கும்பம்: கும்ப ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த சேர்க்கை நடைபெறுவதால் கும்ப ராசிக்காரர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களை ஓட்டும்பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மீனம்: இந்த சேர்க்கை மீன ராசியினரின் வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். தொழில் நிலையில்லாமையை உணரலாம். வேலையிழப்பு ஏற்படலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். முடிவெடுப்பதில் கவனம் தேவை.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago