J.A. George / 2023 ஜூலை 11 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட பணி தொடங்கி உள்ளது.
அதன்படி, டப்பிங் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளதாகவும் முதல் கட்டமாக விஷால் தனது பகுதியின் டப்பிங் பணியை செய்துள்ளதாகவும் தெரிகிறது. நடிகர் விஷால் டப்பிங் செய்யும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த மாஸ் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கெனவே இந்த படம் செப்டம்பர் 15ஆம் திகதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டைம் டிராவல்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படம் இதுவரை இல்லாத அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் புதுவித அனுபவத்தை உணர்வார்கள் என்று பல குழுவினர் தெரிவித்துள்ளனர்
விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025