2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அட்லியின் ஆசைகள்

Editorial   / 2017 நவம்பர் 27 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராகப் பணியாற்றி விட்டு, ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அட்லி,  அடுத்தபடியாகவும் விஜய்க்கான கதையையே தயார்படுத்திக்கொண்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.  

இந்நிலையில், ரஜினி - கமல், விஜய் - அஜீத் ஆகிய நடிகர்களை இணைத்து, திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று, அட்லிக்கு ஆசையுள்ளதாம். இதுபோன்ற முயற்சிகளில் இறங்கி, சில இயக்குநர்கள் பின்வாங்கிய நிலையில், எதிர்காலத்தில் அதற்கான முயற்சிகளில் இறங்கப்போவதாக, அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, ராஜமவுலி பாணியில் பிரமாண்ட சரித்திரத் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசையும் தனக்கு உண்டென, அட்லி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X