Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய், சூர்யா, விஷால் திரைப்படங்களில் நடித்துவிட்டேன். அடுத்து அஜீத் திரைப்படத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன் என்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ரொம்ப குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகிவிட்டவர் கீர்த்தி சுரேஷ். இப்போது டொப் ஹீரோக்களுடன் நடித்துவருகிறார். அவ்வப்போது நகைக்கடை, ஜவுளிக்கடைகளையும் திறந்து வைத்து சேவை செய்து வருகிறார்.
புதிய ஷோரூம் திறப்பு விழாவுக்கு நேற்று சேலம் வந்த கீர்த்தி சுரேஷ், நகைக்கடை திறப்பு விழா முடிந்ததும் பேசுகையில், "சேலத்துக்கு முதல் முறையாக வந்துள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சேலம் இரசிகர்கள் என்மீது வைத்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் எனது மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பார்க்க, வாழ்த்த வந்த இரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'பைரவா' திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தேன். அவருடன் நடித்த அனுபவத்தை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.
சூர்யாவுடன் சேர்ந்து நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. விஷாலுடன் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தில் நடிக்கிறேன். அடுத்து அஜீத்துடன் நடிப்பேன் என்று நம்புகிறேன்" என்று கீர்த்தி கூறியுள்ளார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago