George / 2016 நவம்பர் 17 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமந்தா-நாக சைதன்யா திருமணத்தை அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடத்த உறவினர்கள் திட்டமிட்டு இருப்பதாகத் தெலுங்குத் திரையுலகில் தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்துக்கான நகைகள், உடைகள் வாங்கும் பணிகளில் சமந்தா இப்போதே ஈடுபட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. நாக சைதன்யா, இந்து மதத்தையும் சமந்தா, கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்.
இந்து முறைப்படி ஐதராபாத்திலும், கிறிஸ்தவ முறைப்படி சென்னையிலும் திருமணத்தை நடத்த ஆலோசித்து வருகின்றனர். திருமணத்துக்காக சமந்தா, புதிய திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து வருகிறார்.
தற்போது அவர் கைவசம் 3 திரைப்படங்கள் உள்ளன. விஷால் ஜோடியாக “இரும்புத்திரை” மற்றும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் திரைப்படங்களை திருமணத்துக்கு முன்பு முடித்து கொடுத்து விட திட்டமிட்டு உள்ள சமந்தா, வேறு புதிய திரைப்படங்களில் நடிக்க மறுத்து வருகிறார்.
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago