2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

அதுல்யாவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

J.A. George   / 2022 ஜனவரி 10 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘காதல் கண்கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா. இவரின் எதார்த்தமான நடிப்புக்கும், ஹோம்லியான லுக்கிற்கும் முதல் திரைப்படத்திலேயே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

ஆரம்பத்தில் ஹோம்லியான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'கேப்மாரி' திரைப்படத்திலிருந்து கிளாமரான நடிப்புக்கு திரும்பினார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இவரின் கிளாமர் போட்டோ ஷுட்டுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் அண்மையில் வெளிவந்த 'முருங்கைக்காய் சிப்ஸ்' திரைப்படத்தில் சாந்தனு ஜோடியாக நடித்துள்ளார். அடல்ட் திரைப்படமான 'முருங்கைக்காய் சிப்ஸ்' கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அதுல்யா பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அதுல்யாவா இது? என்ற குழப்பத்தில் உள்ளனர். மேலும் பலர் உங்களுக்கு என்னாச்சு? பிளாஸ்டிக் சர்ஜரியா என கருத்து பதிவுசெய்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .