Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஜூன் 29 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரிப்பில், 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' என்ற படத்தை இயக்கி நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் நடித்த 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படம் ஜூலை 4ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா குிறத்து பெருமையாக பேசியுள்ளார்.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகிளல் வனிதா விஜயகுமார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்து ஒரு படத்தில் வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவுமு் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனிடையே வனிதா விஜயகுமார் அண்மையில் அளித்துள்ள செவ்வி ஒன்றில், தனது மகள் ஜோவிகா குறித்து வனிதா பெருமையாக பேசியுள்ளார்.
அதில், ''என் மகள் எப்போதும் எனக்கு அட்வைஸ் செய்து கொண்டே இருப்பாள். என் மகள் காதலிப்பாளா என்பதில் என் கருத்து சரியாக இருக்காது.
ஆனால் என்னுடைய வாழ்க்கையின் மூலமாக காதல், அதனால் ஏற்படும் வலிகளை பற்றி அவள் கற்றுக் கொண்டிருக்கிறாள். எனவே அவள் காதல் செய்ய மாட்டாள் என்றே நான் கருதுகிறேன். அந்த விஷயத்தில் என் மகள் கவனமாக இருப்பாள் என்று எனக்கு தோன்றுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .