2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

அனிருத்துடன் கல்யாணம் மறுப்பு தெரிவித்த நடிகை

Editorial   / 2023 செப்டெம்பர் 17 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து அடிக்கடி வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கேரள அரசியல் தலைவர் ஒருவரின் மகனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

பின்னர் இசையமைப்பாளர் அனிருத்தும், கீர்த்தி சுரேசும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்களை கிளப்பினர். அவர்கள் நண்பர்களாக பழகுவதாகவும், காதல் இல்லை என்றும் நெருக்கமானவர்கள் மறுத்தனர். கேரள தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனை கீர்த்தி சுரேஷ் மறுத்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் இசையமைப்பாளர் அனிருத்துடன் திருமணம் என பரவிய தகவலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அனிருத்தும், கீர்த்தி சுரேசும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது குறித்து கீர்த்தி சுரேஷ், திருமணம் தொடர்பாக பரவும் தகவல் தவறானது, அனிருத் தனக்கு நல்ல நண்பர் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து திருமணம் குறித்து "திருமணம் நடக்கும்" என்றும் பதிலளித்தார்.

பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் கீர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் முன்னதாக வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .