Editorial / 2026 ஜனவரி 22 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் வீட்டில், தங்க கழிவறை இருக்கிறது. இதன் விலை என்னவென்று தெரியுமா?
Amitabh Bachchan Golden Toilet Price : பலரால் Big B என்று அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன். இவர், இந்தியாவின் மெகா நடிகர்களுள் ஒருவர் ஆவார். ரஜினிகாந்துக்கு மிக நெருக்கமானவராக இருக்கும் அமிதாப் பச்சன், தனது வீட்டில் தங்க டாய்லெட் வைத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அமிதாப் பச்சன் வீட்டில் தங்க டாய்லெட் இருப்பதை, ஒரு நடிகர் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது படு வைரலாகி வருகிறது. இதையடுத்து, அந்த டாய்லெட்டின் விலை என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
பாலிவுட்டின் மெகா நடிகரான அமிதாப் பச்சன், கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கிறார். இந்தி சினிமாவில் மிகப்பெரிய பிரபலம் ஆன இவரது குடும்பமும் ரொம்பவே பெருசு அமிதாப் பச்சன், தமிழ் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்துக்கும் மிகவும் நெருக்கமானவர்.இவருடன் சேர்ந்து இந்தியிலும் தமிழிலும் சில படங்களில் அமிதாப் நடித்திருக்கிறார்.
அமிதாப் பச்சனுக்கு தற்போது 83 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது, ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது போன்ற விஷயங்களை செய்கிறார்.
உலக அழகி மற்றும் நடிகையான ஐஸ்வர்யா ராய், இவரது மருமகள் என்பதும் அனைவருக்கும் தெரியும். இதனாலும், இவர் குடும்பத்தின் மவுசு கூடியது. அமிதாப் பச்சன், இந்தி சினிமாவின் மிகவும் பவர்ஃபுல்லான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
இவரது வீடு மும்பையின் ஜுஹூ என்கிற பகுதியில் உள்ளது. அனைத்து செல்வந்தர்களை போல, அமிதாப் பச்சன் வீடும், ரொம்பவே ஆடம்பரமாக இருக்கும். விலை மதிப்புமிக்க கார்கள், பல அறைகள் கொண்ட அரண்மனை போன்ற வீடு இவ்ருடையது. சமீபத்தில், நடிகர் விஜய் வர்மா 2016ல் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
அப்போது, நடிகர் அமிதாப் பச்சன் வீட்டில் தங்க கழிவறையுடன் எடுத்த செல்ஃபியையும் பகிர்ந்திருந்தார். இதையடுத்து நெட்டிசன்கள், இதன் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து பேசி வருகின்றனர்.
சமீபத்தில் லண்டனில் ஒரு தங்க டாய்லெட் ஏலத்திற்கு வந்தது. இது, அமெரிக்க டொலர் மதிப்பின் படி, 10 மில்லியன் டொலர்களாகும். இது, இந்திய ரூபாயின் மதிப்பின் படி சுமார் 9-10 கோடி ரூபாய் ஆகும். எனவே, அமிதாப் பச்சன் வீட்டில் இருக்கும் தங்க கழிவறைக்கும் இதே விலை இருக்கலாம் என கூறப்படுகிறது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago