Mithuna / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடித்துள்ள 'அமரன்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சனிக்கிழமை (17) படக்குழு வெளியிட்டுள்ளது.

வௌ்ளிக்கிழமை (16) அமரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், சனிக்கிழமை (17) சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்
1992 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் படத்தின் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025