Editorial / 2019 ஜூன் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

விஜய் சேதுபதியின் 33ஆவது திரைப்படத்தை, சந்திரா ஆர்ட்ஸ் என்றத் திரைப்பட நிறுவனம் தயாரிக்க,எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் வெங்கட் கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார்.
இந்தத் திரைப்படத்தில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அமலா போல் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. அத்தோடு, ‘தடயற தாக்க’, ‘தடம்’ திரைப்படங்களின் இயக்குநரான மகிழ்திருமேனி, வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திரைப்படத்தில் இருந்து, அமலா போல் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு, விரைவில் ஊட்டியில் தொடங்க உள்ளது.
இந்தச் சூழலில், அமலா போல் ஏன் மாற்றப்பட்டார்? முதலில் ஆர்வத்துடன் நடிக்க ஒப்புக்கொண்ட அமலா போல், அதன் பிறகு, தான் பேசிய சம்பளத்தைவிடக் கூடுதல் தொகையைக் கேட்டதாகவும் சில பல கண்டிஷன்களை அடுக்கியதாகவும், அதனால் கடுப்பான தயாரிப்பாளர், அமலா போல் வேண்டாம் எனக் கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதேசமயம், கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே அமலா போல் நடிக்கவில்லை என்று, அவர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago