J.A. George / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்னட சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமாகி தெலுங்குத் திரையுலகில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவரது நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம், மை டியர் காம்ரேட், உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நாயகியாக நடித்தார்.
அதன்பிறகு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஐந்து மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் கிடைத்த புகழை தன்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தினார்.
இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில் அவரை இன்டர்வியூ எடுப்பது போன்ற காட்சியில் நடிப்பதற்கு படக்குழு ராஷ்மிகாகை அணுகியுள்ளது.
அரைமணிநேர காட்சிக்கு இவர் ரூபாய் ஒரு கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் அதிர்ந்து போயுள்ளார். பல நடிகைகள் தற்போது வரை ஒரு படத்திற்கு ஒரு கோடி மட்டுமே சம்பளம் வாங்கி வரும் நிலையில் இவர் அரைமணிநேர காட்சிக்கு ஒரு கோடி கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026