2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆச்சரியப்படுத்திய விஜய் சேதுபதி

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்டன்ட் யூனியன் ஆரம்பிக்கப்பட்ட 51ஆவது தினம், சென்னை வடபழனியில் கொண்டாடப்பட்டது. இதில், விஜய் சேதுபதி, விக்ரமன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கண் சிகிச்சை முகாம் உள்ளிட்ட இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. ஏராளமான கலைஞர்கள் இரத்ததானம், கண்தானம் செய்தனர்.

நடிகர் விஜய் சேதுபதியும், இரத்ததானம் செய்து ஆச்சரியப்படுத்தினார். பின்னர் பேசிய விஜய் சேதுபதி, “படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சிகளில் எங்களுக்காக எவ்வளவோ இரத்தத்தை நீங்கள் இழந்துள்ளீர்கள். உங்களுக்காக இந்த விழாவில் நானும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்ததை நன்றிக்கடனாக நினைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும், இதுப்போன்று மற்றவர்களையும் செய்ய வலியுறுத்துவேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்டன்ட் கலைஞர்களின் மூத்த உறுப்பினர்கள் 6 பேர் கௌரவிக்கப்பட்டனர். சங்கத்திதுக்குப் புதிதாக, WWW.SISDSAU.COM என்ற இணையதளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தச் சங்கத்துக்கு, தயாரிப்பாளர் எஸ்.தாணு, 1 இலட்சம் இந்திய ரூபாயை, நன்கொடையாக வழங்கினார்.

விழாவில் பேசிய இயக்குநர் விக்ரமன், “ஸ்டன்ட் காட்சிகளில் சற்று நிதானத்தைக் கடைபிடியுங்கள். இரத்ததானம், கண்தானம் செய்த அனைவருக்கும் நன்றி” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X