Editorial / 2026 ஜனவரி 02 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனுஸ்ரீ தத்தா தனது வெளிப்படையான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் அடிக்கடி டிரெண்டிங்காக இருந்து வருகிறார்.
விஷால் நடித்த "தீராத விளையாட்டு பிள்ளை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த தனுஸ்ரீ தத்தா தனது வெளிப்படையான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் அடிக்கடி டிரெண்டிங்காக இருந்து வருகிறார்.
சமீபத்தில் தனது வீட்டில் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது என பரபரப்பாக வீடியோ வெளியிட்டு இருந்தார். அவரது வீடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனுஸ்ரீதத்தா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், ‘ஒரு இயக்குனர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறினார். ஒரு படப்பிடிப்பின் போது இயக்குனர் உங்கள் ஆடைகளை கழட்டிட்டு நடனம் ஆடுங்கள் என கூறினார்.
அப்போது நான் அமைதியாக இருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர்கள் மிகவும் வேதனைப்பட்டனர். அவர் சொன்னது தவறு என நினைத்தார்கள். மீடூ பிரசாரத்தின் போது யாரும் பேச முன் வரவில்லை. எல்லோரும் என்னை ஆதரித்தனர். இதை தொடர்ந்து இயக்குனர் அமைதியானார். அந்த காட்சியில் என்னுடைய ஆடை கொஞ்சம் வெளிப்படையாக இருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .