Editorial / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தரமணி, வடசென்னை உள்ளிட்ட அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட படத்தையே தெரிவு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதைகளை இசைத்துப் பாடினார். அப்போது அவர் பேசிய சில தனிப்பட்ட கருத்துக்கள், அவரை பிரபல அரசியல் வாரிசு ஒருவருடன் இணைத்து பேசும் அளவுக்கு சென்றது.
அதற்கு சில நாட்களுக்கு பின்பு ஆண்ட்ரியாவோ, 'நான் பேசியதாக பல்வேறு தவறான செய்திகள் பரவிவிட்டது. நடிகர் அரசியல்வாதி என்றெல்லாம் கட்டுக்கதை கிளப்பி விட்டார்கள்' என்று கூறினார்.
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா விடுமுறையை கொண்டாட வெளிநாடு பறந்துள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆடையை காற்றில் பறக்கவிட்டவாறு ஆண்ட்ரியா எடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
28 minute ago
33 minute ago
45 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
45 minute ago
48 minute ago