Editorial / 2022 மார்ச் 30 , பி.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும். ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை.
பெண்கள் கொண்டம் வாங்கினால் என்ன தப்பு எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை அக்ஷரா ஹாசன்.
அறிமுக இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார்.
பெண்களின் பதின்பருவ ஆசைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஒரு சிலரிடம் ஆதரவையும், பலரிடம் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் அக்ஷரா ஹாசன் ஒரு காட்சியில் கடைக்கு சென்று காண்டம் வாங்குவார். இதையடுத்து அவர் கலந்துக் கொண்ட நேர்க்காணல் ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அக்ஷரா ஹாசன், ”இங்க பாலியல் உணர்வை பெண்கள் கன்ட்ரோல் செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அது முடியாது, நாங்களும் மனிதர்கள் தான். என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும். ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை. நீங்கள் பாதுகாப்பாக உடலுறவு செய்கிறீர்கள். ஒழுங்காக உடலுறவு நடக்கிறது. அதில் என்ன பிரச்னை?” எனக் கேட்டுள்ளார்.
34 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
5 hours ago