Freelancer / 2022 ஏப்ரல் 16 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால், தற்போது ஆணுறையை விளம்பரத்தில் நடித்தமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆணுறையை விளம்பரப்படுத்தி அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பணத்துக்காக இப்படியா செய்வது என அவரை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் சமூக வலைதள பக்கத்தில் மதுபான போத்தலை திறந்து கையில் உள்ள கிண்ணத்தில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும் அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என்று பேசியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுஇருந்தார்.
நிதி அகர்வால் மது விளம்பரத்தில் நடித்தது சமூக ஆர்வலர்களை ஆத்திரப்படுத்தியது. இளைஞர்களை நிதி அகர்வால் மது அருந்த தூண்டுவதாக வலைத்தளத்தில் பலர் விமர்சித்தும், கண்னமும் தெரிவித்தனர்.
நடிகை நிதி அகர்வால், தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்து வருகிறார்கள் அவ்வப்போது இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி சிக்கலில் மாட்டி கொள்கின்றனர்.
சமீபத்தில் முன்னணி நடிகைகள் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
3 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
17 Jan 2026
17 Jan 2026