Freelancer / 2022 ஜூன் 25 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
இப்படத்திற்காக இவர் போட்ட முதல் பாடலான "வை திஸ் கொலவெறி" உலக அளவில் பிரபலமானது. முதல் படத்திலேயே பிரபலமான அனிருத், அடுத்தடுத்து இசையமைத்த அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.
இதனால் குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
தொடர்ந்து வெற்றியை கண்ட அனிருத், சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். அதில் ஒன்று தான் ஆண்ட்ரியா உடனான காதல் சர்ச்சை.
இவர்கள் இருவரும் நெருக்கமாக முத்தம் செய்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
பின்னர் சில ஆண்டுகளில் இந்த காதல் முடிவுக்கு வந்தது. ஆண்ட்ரியா உடனான காதல் முறிவு குறித்தும், இருவரும் பிரேக் அப் செய்துகொண்டதற்கான காரணம் குறித்தும் அனிருத் ஒரு நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, 'நான் 19 வயதில் ஆண்ட்ரியாவை காதலித்தேன், அப்போது அவருக்கு 25 வயது. எங்களது காதல் தோல்வியில் முடிந்ததற்கான ஒரே காரணம் எங்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் தான். என்னைவிட 6 வயது பெரிய பெண்ணாக இருந்ததனால் செட் ஆகவில்லை அதனால் பிரேக் அப் செய்துவிட்டோம்' என அனிருத் கூறினார்.

29 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago