Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாயல் கோஷ். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஓசரவல்லி படத்தில் நடித்து பிரபலமாகி தொடர்ந்து அதிக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
ரிஷிகபூர், பரேஸ் ராவலுடன் படேல் கி பஞ்சாபி சாதி என்ற இந்திபடத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பட வாய்ப்புக்காக தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லையை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பாயல் கோஷ் கூறும்போது, “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போது பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ள ஒரு இயக்குநரை அவரது வீட்டில் போய் சந்தித்தேன். நன்றாக பேசினார்.
அவரிடம் மது அருந்திய வாசனை வந்தது. என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு வீடியோ கேசட்டுகள். டி.வி.டி.கள் இருந்தன. ஒரு கேசட்டை எடுத்து டி.வி.யில் போட்டார்.
அதில் ஆபாச படம் ஓடியது. அதை பார்த்து அதிர்ச்சியானேன். சினிமாவில் இதெல்லாம் சகஜம். நான் அழைத்தால் பல பெண்கள் என்னுடன் வந்து இருந்து விட்டு போவார்கள் என்றார்.
நான் அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்து விட்டேன். அந்த சம்பவம் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது” என்றார்.
8 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
52 minute ago
2 hours ago