Lenin Raj / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீரடி பாபா கோவிலுக்கு நடிகர் விஜய் நேற்று வழிபாட்டிற்காகச் சென்ற புகைப்படங்களும் செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மகாராஷ்டிர மாநிலம், அகில்யா நகரிலுள்ள (அகமது நகர்) சீரடி பாபாவின் சிலைக்கு மலர் தூவியும், பாதங்களைத் தொட்டு வணங்கியும் அவர் ஆராதனையில் ஈடுபட்டார்.
தரிசனத்தை நிறைவு செய்துவிட்டு விஜய் கோவிலை விட்டு வெளியேறியபோது, அவரைப் பார்ப்பதற்கும் அவருடன் செல்பி (தற்படம்) எடுப்பதற்கும் ரசிகர்கள் முண்டியடித்ததால் பெரும் சன நெரிசல் ஏற்பட்டது. தனது இரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் கையசைத்துத் தனது அன்பை வெளிப்படுத்தினார் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த நடிகை கனிகாவைக் கண்டதும் விஜய் புன்னகைத்தார். உடனே அவரிடம் சென்ற கனிகா, “உங்களுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியுமா? உங்களோடு நடிப்பதற்குத்தான் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஒரு செல்பியாவது எடுக்கலாமா?” எனத் தயக்கத்துடன் கேட்டார். அதற்கு விஜய் “தாராளமாக” என்று கூறி ஒற்றைவார்த்தையால் அனுமதி அளித்தார்.
விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கனிகா, “இது நடந்துவிட்டது! அவருடன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவரை நேரில் சந்தித்தது ஓர் அற்புதமான தருணம். பாதுகாப்புப் படையினர் அவரை அவசரமாக அழைத்துச் சென்றபோதிலும், எனக்காகச் சற்று நேரம் ஒதுக்கிப் பணிவான வார்த்தைகளைப் பேசினார். வெற்றி உங்கள் பக்கம் இருக்கட்டும், நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.



7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026