2026 மார்ச் 07, சனிக்கிழமை

இதுதானா தலைப்பு?

Freelancer   / 2022 ஜூன் 01 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அட்லீ. தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நயன்தாரா நடிக்கும் லயன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இதனைத்தொடர்ந்து, மீண்டும் விஜய் நடிக்கும் திரைப்படத்தை அவர் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66ஆவது திரைப்படத்தில் நடிக்கும் விஜய், அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார். 

அந்தத் திரைப்படத்தை முடித்ததும் மீண்டும் அட்லியுடன் இணைய போவதாக கூறப்படுகிறது. அந்தவகையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68ஆவது திரைப்படத்தில் பிகில் திரைப்படத்தில் விஜய் நடித்த ராயப்பன் என்ற அப்பா பாத்திரத்தை பிரதானப்படுத்திய ஒரு கதையை அட்லி தயார் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 

அதோடு அந்தத் திரைப்படத்துக்கு ராயப்பன் அல்லது பிகில் - 2 என்று தலைப்பு வைப்பதற்கு விஜய்யும், அட்லியும் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .