Editorial / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமா ரசிகர்களை நெடுங்காலமாகச் சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் மதன் பாபு சனிக்கிழமை (02) மாலை 5 மணியளவில் சென்னையில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். வயது 71.
1953-ஆம் ஆண்டு சென்னை நகரில் பிறந்த மதன் பாபு, திரையுலகில் தனது பயணத்தை இசை துறையில் தொடங்கியவர். ஆரம்பத்தில் நாடகங்களுக்கு இசை அமைப்பதிலும், ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும் ஈடுபட்டிருந்த அவர், பின்னர் ‘ஆல் இந்தியா ரேடியோ’ மற்றும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இசை நிகழ்த்தினார். அவருக்கு இயற்கையாகவே இருந்த சிறிய ஸ்டாமரிங் பிரச்சனையை மறைப்பதற்காக அவர் தன் சிரிப்பை ஒரு குறியாக மாற்றிக் கொண்டார். அந்த சிரிப்பே அவரை ஒரு தனித்துவ நடிகராக தமிழ்ப் பட உலகில் நிலைநிறுத்தியது.
ஸ்டாமரிங் (Stammering) என்றால் தடுமாற்றமாக பேசுவது, அதாவது வார்த்தைகளை அல்லது ஒலிகளை சொல்வதில் தொடர்ச்சியாகப் பேச முடியாமல் தடங்குதல், முழுமையாக வார்த்தையைச் சொல்ல முடியாமல் தடுமாறுவது , இருப்பினும்”அவர் பேசும் போது ஸ்டாமரிங் இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் பேசினார்.” “மதன் பாபு தனது ஸ்டாமரிங்கை ஒரு சிரிப்பால் மறைத்து ரசிகர்களை கவர்ந்தார்.”
மதன் பாபுவின் மிக நெருக்கமான நண்பரான நடிகர் எஸ்.வி. சேகர், “நாம் குடும்பம்” சீரியலில் முதன்முதலாக அவருக்கு வாய்ப்பு அளித்தேன் என நினைவுகூர்கிறார். “மதன் பாபுவின் சிரிப்பு ஒரு பாஸிடிவ் அவுட்லெட்டாக மாறியது. தன்னம்பிக்கையின் பிரதிமூர்த்தி. அவருக்கு தெரிந்தது மிகவும் விஷாலமான நாலட்ஜ். வேதம் முதல் இசை வரை, அவர் பேசும் ஒவ்வொரு விஷயமும் ஆழமான அறிவுடன் இருந்தது,” என்கிறார் எஸ்.வி. சேகர். மேலும், “அவர் ஒரு நேர்மையான நண்பர். எதுவும் முடியாத நிலைக்கு வந்தால் நேராக சொல்லித் தவிர்ப்பவர். அது அவரது நேர்மையின் பிரதிபலிப்பு” என்றும் புகழ்ந்தார்.
மதன் பாபு, தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். ‘நம் குடும்பம்’, ‘வசந்தம்’, ‘அரசியல்’, ‘வசூல் ராஜா MBBS’, ‘அய்யா’, ‘திருப்பாச்சியில் சுந்தரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் மறக்கமுடியாத வேடங்களை செய்துள்ளார். சமீபகாலங்களில் ஒரு முக்கிய மெகா சீரியலில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வந்தார். என்று கூறுகிறார் எஸ்.வி. சேகர்.
அவரது மறைவு திரையுலகிற்கு ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. சிறந்த நகைச்சுவை உணர்வு, நேர்மை, இசை அறிவு, குடும்ப பாசம் என பல வகைகளிலும் பன்முகம் கொண்டவர் மதன் பாபு. அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திக்கின்றனர்.
33 minute ago
2 hours ago
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
27 Dec 2025
27 Dec 2025