Ilango Bharathy / 2021 ஜூன் 06 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினியின் ’ஊர்காவலன்’, விஜயகாந்தின் சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கறுப்பு நிலா உட்பட சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா.

மேலும் இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். ’சதுரங்க வேட்டை’ ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மனோபாலா தனது இளமைக்கால புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அப்புகைப்படத்தில் அவர் நீண்ட தலைமுடியுடன் இப்போதுள்ளது போன்றே ஒல்லியான உடலமைப்புடன், கண்ணாடியுடன் காணப்படுகிறார். கருப்பு வெள்ளையிலுள்ள அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025