2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இயக்குனர் அருண் ராஜாவின் மனைவி காலமானார்

Editorial   / 2021 மே 17 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் காலா படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலைப் பாடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ்.

நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இவர் கனா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார்.

கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஆர்ட்டிக்கள் 15 என்ற படத்தின் ரீமேக்கை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அருண்ராஜாவின்  மனைவி கொரோனாத்தொற்றினால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 அவரது  மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .