2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இயக்குனர் பா.ரஞ்சித் மீது பாய்ந்த வழக்கு

Freelancer   / 2025 ஜூலை 15 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், படப்பிடிப்பின்போது மரணமடைந்த சம்பவத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

பா. ரஞ்சித், வினோத், சண்டைக்காட்சி இயக்குநர் ராஜ்கமல், நீலம் புரொடக்ஷன்ஸ், பிரபாகரன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பில் கார் கவிழும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது மோகன்ராஜ் (52) என்ற ஸ்டண்ட் கலைஞர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

விபத்து நடந்த உடனேயே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பா. ரஞ்சித் மற்றும் படத்தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் (AICWA) கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X