Editorial / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜயின் திரைப்படம் வெளியானால், திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். இரசிகர்கள் விஜயை திரையில் பார்த்த மகிழ்ச்சியில் ஆர்பரிப்பார்கள்.
இத்தகைய, இரசிகர்களின் ஆரவாரங்கள் என அனைத்தையும் நேரில் வந்து பார்க்க, விஜய் மாறுவேடத்தில் சென்னையிலுள்ள காசி திரையரங்குக்கு வருவது வழமையாகுமாம். இதுவரை மெர்சல், கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களுக்கு இரகசியமாக விஜய், இரசிகர்களோடு அமர்ந்து படத்தைப் பார்த்ததாக குறித்த தியேட்டர் உரிமையாளர் தெரிவித்தார்.
விஜய் வந்திருப்பது தெரிந்தால் இரசிகர்கள் மிக அதிகமாக குவிந்துவிடுவார்கள் என்பதால் தான், விஜய் இப்படி இரகசியமாகப் படங்களுக்கு வந்து செல்கிறாரெனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அண்மையில் தூத்துக்குடிக்கு இரகசியமாக நடிகர் விஜய் வந்து சென்றதையும் குறிப்பிடலாம்.
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025