2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

இராமேஸ்வரம் கிளம்புகிறார் சக்தி

Editorial   / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்நீச்சல் தொடர்கிறது நாடகத்தில் குணசேகரன் பற்றிய ரகசியங்களை அறிவதற்காக இராமேஸ்வரம் கிளம்ப முடிவு செய்கிறான் சக்தி. தனியாக அவன் போகவும், குணசேகரன் தடுக்காமல் போய்ட்டு வாப்பா என்று சொல்லி அனுப்பி வைக்கிறான். இதனால் நந்தினி, ரேணுகா இருவரும் சக்திக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோவென பயப்படுகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியில் வீடியோ ஆதாரங்களை தேடும் வேலையை பார்க்குமாறு கூறிவிட்டு, தனியாக இராமேஸ்வரம் கிளம்புகிறான் ஜனனி.

எதிர்நீச்சல் தொடர்கிறது நாடகத்தில் கெவினின் பிரெண்ட் ஆகாஷ் கண் முன்னாகவே சுட்டுக் கொலை செய்யப்பட அதிர்ச்சியில் இருக்கின்றனர் ஜனனி, சக்தி. அதே நேரம் அவர்கள் எதற்காக அவனை போய் பார்த்தார்கள் என்பதில் குணசேகரன் குழப்பமாகவே இருக்கிறான். இதனால் இரண்டு பேரும் வீட்டுக்கு வந்ததும் உங்க கிட்ட வீடியோ இருக்கும் சொல்லித்தானே டைம் கேட்டீங்க. அப்பறம் எதுக்காக அந்த பையனை போய் பார்த்தீங்க. அந்த வீடியோல என்ன இருக்கு சொல்லு பார்ப்போம் என்று கேட்கிறான் குணசேகரன். ஜனனி கொஞ்சம் யோசித்து விட்டு ஈஸ்வரிக்கு நடந்த கொடூரங்கள் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறாள். அதனைக்கேட்டு அதிர்ச்சி அடையும் அவன் பதினைந்து நாட்களுக்குள் எல்லாத்தையும் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று எச்சரிக்கிறான்.

இதனையடுத்து எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்டில் ஆகாஷ் இறப்பதற்கு முன்பாக தன்னிடம் சொன்ன விஷயங்களை பற்றி நந்தினி, ரேணுகா ஆகியோரிடம் சொல்கிறாள். அதனைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைகிரர்குள். இந்தாள் எந்த எல்லைக்கும் போவாரு. இதோடு இதை விட்டுடலாம் என்று சொல்கிறாள் நந்தினி. ஆனால் ஜனனி இந்த முறை அவர் ஜென்மத்துக்கும் வெளிய வராத மாதிரி உள்ள தள்ளனும். என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று சபதம் எடுக்கிறாள். அதன்பின்னர் ஜனனி தூங்கி கொண்டிருக்கும் சமயத்தில், சக்தி லெட்டர் பற்றி யோசிக்கிறான். அதன் பின்னணியில் இருக்கும் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்று முடிவு எடுக்கிறான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X