Editorial / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா, செவ்வாய்க்கிழமை (21) அன்று காலை சென்னையிலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்பிற்குப் பயணம் மேற்கொண்டார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான UL122 என்ற விமானத்தில் அவர் பயணித்தார். விமானத்தினுள்ளும், விமான நிலையத்திலும் அவர் பயணித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.
நடிகர் சூர்யாவின் இந்தத் திடீர் இலங்கை வருகைக்கான அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனினும், படப்பிடிப்புத் தளம் ஒன்றைப் பார்வையிடவோ அல்லது தனிப்பட்ட பயணமாகவோ இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது வருகையையொட்டி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

41 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago
2 hours ago