Editorial / 2021 ஜூலை 21 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தயாரிப்பாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் உள்ள மிராரோடு, சாந்தி நகர் பகுதியில் விபசாரம் நடந்து வருவதாக பொலிஸாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி பொலிஸார் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி விசாரித்தனர்.
இதில் திரைப்பட தயாரிப்பாளர் கன்யாலால் பால்சந்தானி மற்றும் அவருக்கு உதவியாக வனிதா இங்கலே உள்பட 3 பேர் சேர்ந்து விபசாரம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பொலிஸார் அங்கு அதிரடி சோதனை நடத்தி அந்த 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை விபசாரத்தில் தள்ளியது தெரிய வந்தது.
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025