2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

உக்ரைனில் சிக்கி கொண்ட தமிழ் நடிகை?

J.A. George   / 2022 மார்ச் 01 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் 'பிறப்பு’ என்ற திரைப்படத்திலும் ஒருசில மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரியா மோகன். இவர் நடிகை பூர்ணிமா இந்திரஜித்தின் சகோதரி.

இந்த நிலையில் நடிகை பிரியா மோகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் சென்றதாகவும் அங்கிருந்து அவர் போர் காரணமாக திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் அவரது குடும்பத்தினர் அவரை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரியா மோகன், ‘கடந்த ஓகஸ்ட் மாதம் நானும் எனது குடும்பத்தினரும் உக்ரைன் நாட்டிற்கு சுற்றுலா சென்றது உண்மைதான் என்றும் ஆனால் நாங்கள் உக்ரைனில் இருந்து திரும்பி விட்டோம் என்றும் தற்போது கொச்சியில் வசித்து வருகிறோம் என்றும் கூறினார்.

நானும் எனது குடும்பத்தாரும் உக்ரைனில் சிக்கிக் கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் தவறு என்றும் போர்பதட்டம் உள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X