2021 ஜூன் 16, புதன்கிழமை

‘எனக்கு அழைப்பு இல்லை’

Editorial   / 2020 மே 26 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமல் நடிப்பில் உருவாக உள்ள, ‘தலைவன் இருக்கிறான்’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என, நடிகை பூஜா குமார் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தனக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என, பூஜாகுமார் கூறியுள்ளார்.

அத்துடன், கமல் உடனான உறவு குறித்து கருத்து வெளியிட்ட பூஜா, கமலையும் அவரது குடும்பத்தாரையும் தனக்கு ரொம்ப நாளாகவே தெரியும் என்றும் அவருடன் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே அவரது குடும்பத்துடன் நல்ல பழக்கம் இருகக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், அவரது அண்ணன் தயாரிப்பாளர் தொடங்கி, மகள்கள் வரை எல்லோரையும் தெரியும் என்ற அடிப்படையில் அவரது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்றும் பூஜா குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலுடன் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம்(1, 2)’ மற்றும் ‘உத்தம வில்லன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த பூஜா குமார், சில மாதங்களுக்கு முன்பு கமலின் இல்ல விழா நிகழ்ச்சியில் நடிகைகளில்       ஒருவராக  இவர் ஒருவர் மட்டுமே பங்கேற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .