R.Tharaniya / 2025 ஜூன் 12 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’.
சேகர் கம்முலா இயக்கிய இப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் ஜூன் 20 ஆம் திகதி வெளியாக உள்ளது . இந்தப் படத்தின் இந்திப் பாடல் வெளியீட்டு விழா, மும்பையில் நடைப்பெற்றது அப்போது நடிகர் தனுஷ், “எனக்கு இந்தி தெரியாது” என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது...
“குபேரா உண்மையிலேயே வித்தியாசமான, சிறப்பான படம். இதை இன்னொரு படம் என்று கடந்துவிட முடியாது. என் மனதுக்கு நெருக்கமான படம் இது. இதை என்னுடன் நடித்தவர்களும் ஏற்பார்கள் என்று நம்புகிறேன். இயக்குநர் சேகர் கம்முலா புத்திசாலித்தனமானவர்.“
இந்தப் படத்துக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் சொன்னாரோ, அதையே பின்பற்றினேன். அவர் எனக்கு நுணுக்கங்களையும் பேச்சு வழக்கையும் கற்றுக் கொடுத்தார். இதற்கு முன் நான் நடித்த படங்களில் இருந்து இதில் வேறு மாதிரி கதாபாத்திரம். அந்த சவாலை மிகவும் ரசித்தேன்.
இதன் படப்பிடிப்பில் அருமையான அனுபவம் கிடைத்தது. படத்துக்காகக் குப்பைக் கிடங்கிலும் குப்பை லாரியிலும் ஆறு முதல் ஏழு மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது. ‘என்ன இப்படி நாற்றம் அடிக்கிறது’ என்றேன். அதற்கு அவர், ‘எனக்கு அப்படி எதுவுமே அடிக்கவில்லையே?’ என்ற தனுஷ் கூறினார்.


47 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
1 hours ago