Lenin Raj / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

கார் பந்தய வீரராகத் தனது திறமையை நிரூபித்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழும் அஜித்குமார், 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். தற்போது 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கியிருக்கின்றார்.
இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்துகொண்டு வருகிறது.
இந்த நிலையில், பிரான்சில் நடைபெற உள்ள மிச்செலின் லெ மான்ஸ் (Michelin Le Mans Cup) போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர், அஜித்குமார் ட்ராக் பார்வையிடும் வீடியோ வெளியாகியுள்ளது. சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகின் முக்கியமான போட்டிகளில் ஒன்றான இந்தத் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டி, மே 2ஆம் தேதி சர்க்யூட் பால் ரிகார்டில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் அஜித் ரெடான்ட் ரேஸிங் ‘Ajith Redant Racing’ அணி சார்பில் இரண்டு முக்கிய கார்கள் களமிறங்க உள்ளன. இதனால் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. போட்டிக்கு முன் அஜித்குமார் ட்ராக் ஆய்வு மேற்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகின்றது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago