2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

என்னம்மா நீ டிரஸ் போடுற

Editorial   / 2023 ஜனவரி 08 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் சட்டவிரோதமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாக நடிகை மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 'பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும் ஆச்சரியப்படவைக்கும். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள் அல்லது பூ இதழ்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து புகைப்படங்களாக வெளியிடுவார்.

இந்த நிலையில் பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் சட்டவிரோதமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாக சமூக ஊடக செல்வாக்கு மிக்க உர்பி ஜாவேத் மீது எழுத்துப்பூர்வ முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இந்த முறைப்பாட்டை வழக்கறிஞர் அலி காஷிப் கான் தேஷ்முக் கடந்த வெள்ளிக்கிழமை அந்தேரி பொலிஸ் நிலையத்தில் அளித்துள்ளார்.

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X