S.Renuka / 2026 ஜனவரி 19 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய திரையுலகில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் பூஜா ஹெக்டே.
இவர் அழகு, நடிப்பு, நடனம் ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தென்னிந்திய சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
பூஜா ஹெக்டே தற்போது பல பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சில காலமாக பிரபல நடிகைகள் தங்களது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பூஜா ஹெக்டேவும் தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான்-இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ அனுமதியின்றி எனது கேரவனில் நுழைந்து எல்லை மீறி என்னைத் தொட முயன்றார். உடனடியாக அவரை அறைந்தேன். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் மீண்டும் என்னுடன் பணிபுரியவில்லை என நடிகை பூஜா ஹெக்டே கூறினார்.
1 hours ago
4 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
26 Jan 2026