Editorial / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தற்போதைய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 5ம் திகதியில் இருந்து மருத்துவமனையில் இருக்கிறார். கடந்த 12ம் திகதியில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார்.
அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதையடுத்து திரையுலகை சேர்ந்தவர்களும், இசை ரசிகர்களும் சேர்ந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.
அதன் பிறகு எஸ்.பி.பி.யின் நிலைமை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. எஸ்.பி.பி.யின் உடல்நலம் பற்றி அவரின் மகன் சரண் தினமும் அப்டேட் கொடுத்து வந்தார். அவர் அப்டேட் கொடுப்பதை நிறுத்தியதை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது செய்யப்பட்ட பரிசோதனையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த நல்ல தகவலை சரண் தான் தெரிவித்திருக்கிறார்.
எஸ்.பி.பி.க்கு கொரோனா பாதிப்பு குணமாக வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்து வந்த ரசிகர்களுக்கு இது நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும்.
49 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago