2025 மே 05, திங்கட்கிழமை

’ஏகே 61’ படத்தில் இணைந்த 3 நடிகர்கள்..

Freelancer   / 2022 ஜூன் 05 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித் நடித்து வரும் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி அடுத்த கட்ட படப்பிடிப்பு மற்றும் இந்த படத்தில் இணைந்த 3 நடிகர்கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

அஜித் நடித்து வரும் 'ஏகே 61' திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார் என்பதும், ஜிப்ரான் இசையில்,  போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அண்ணா சாலை செட் போடப்பட்டு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், அண்ணாசாலை செட்டில் நடைபெறவேண்டிய படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாகவும்,  இதனை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், புனே படப்பிடிப்பில் அஜித்துடன் மஞ்சுவாரியர் இணைய உள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளது.

புனே படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது.

மேலும், இந்த படத்தில் மகாநதி சங்கர், பகவதி பெருமாள் மற்றும் ஜிஎம் சுந்தர் ஆகிய மூவரும் இணைந்து உள்ளதாகவும் படக்குழுவினர் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

'

ஏகே 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க இருப்பதாகவும்,  இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கேற்றவாறு பணியை விறுவிறுப்பாக செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X