2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஐதராபாத் பறந்த அமலா

J.A. George   / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் கொரோனா தாக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நடிகை அமலாபால்  மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.

முகம் முழுதும் மூடும் விதமான, கண்ணாடி முகக்கவசம் அணிந்தபடி, விமானத்தில் பயணிக்கும் தனது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள அமலாபால், “ஐதராபாத்தில் நடைபெற உள்ள எனது புதிய திரைப்படத்தில் கலந்து கொள்வதற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வேலைக்கு திரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்குத்தானே சில தத்துவார்த்தமான ஆலோசனைகளையும் கூறிக் கொண்டுள்ளார். “புதிய நினைவுகளை உருவாக்கு.. பழைய நண்பர்களை தொடர்பு கொள்.. மறக்கப்பட்ட எதிரிகளிடம் வருத்தம் தெரிவி... உனக்கு பிடித்தமானவருக்கு நன்றி சொல்.. உன்னை நீயே கண்டுபிடி... வேலை செய்ய கிளம்பு.. போ.. போகவிடு” என்று பதிவிட்டுள்ளார் அமலாபால்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X