Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் புதிய வெப் தொடரில் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'ஜெகமே தந்திரம்', 'கட்டா குஸ்தி', 'பொன்னியின் செல்வன்', 'தக்லைப்', 'மாமன்' படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறாராம்.
அர்ஜுன் தாசும், ஐஸ்வர்யா லட்சுமியும் காதலிப்பதாக 'கிசுகிசு'க்கப்பட்டது. இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலானது. ஆனால் இருவருமே இதனை மறுத்தனர்.
இந்தநிலையில் 'கிசுகிசு' காதல் ஜோடியான இவர்கள், புதிய படத்தில் இணைந்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. காட்சிகளும் 'கலர்புல்' ஆக எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
31 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
46 minute ago