J.A. George / 2023 ஜூலை 11 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங் சாப் தி கிரேட் என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஊர்வசி ரவுத்தலா, தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தற்போது ஹிந்தியில் பிசியாக நடித்து வரும் ஊர்வசி ரவுத்தலா, அவ்வப்போது தெலுங்கு படங்களில் ஐட்டம் டான்ஸும் ஆடி வருகிறார். அந்த வகையில், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஐட்டம் டான்ஸ் ஆட அவர் ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.
தெலுங்கில் பாயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்துக்காக அவர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளாராம்.
இப்படத்தில் 3 நிமிட ஐட்டம் சாங் ஒன்று உள்ளதாம். இதன்மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஊர்வசி ரவுத்தலா உருவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கேட்ட தொகையை கொடுத்து படக்குழுவும் அவரை ஐட்டம் டான்ஸ் ஆட புக் செய்துவிட்டதாம். நடிகை ஊர்வசி ரவ்துலா தெலுங்கு படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுவது இது முதன்முறையல்ல.
இதற்கு முன்னதாக சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த வால்டர் வீரய்யா மற்றும் அகில் நடித்திருந்த ஏஜெண்ட் ஆகிய திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026