Editorial / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் நடிகை துஷாரா விஜயன், தற்போது தனது சமீபத்திய புகைப்படங்கள் மூலம் இணையத்தில் வைரலாகி வருகிறார்.
விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில், ஆர்யாவின் மனைவியாக 'மாரியம்மா' கதாபாத்திரத்தில் துஷாரா நடித்திருந்தார். எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வென்ற இவரைப் பிரபலமாக்கியது அந்தத் திரைப்படமே. அதனைத் தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் 'ரெனே' எனும் சவாலான வேடத்தில் நடித்துத் தனது நடிப்புத் திறமையை மீண்டும் நிரூபித்தார்.
இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்த இவர், தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டும் துஷாரா விஜயன், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். புடவையில் மிக அழகாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கும் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த புகைப்படங்களில் அவர் அணிந்திருக்கும் விலையுயர்ந்த புடவைதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. இதன் விலை சுமார் 1,04,800 ரூபாய் எனக் கூறப்படுகிறது. ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேலான விலையுள்ள இந்தப் புடவையில் துஷாரா விஜயன் தேவதை போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.




40 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago
2 hours ago