Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதுவரை போட்டியாளர்கள் 3 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் கழித்துள்ளனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக போட்டியாளர்களை பற்றிய உண்மை குணம் அவ்வப்போது எட்டிபார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராக ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுரேஷ் சக்கரவர்த்தி ‘சிலர் வணக்கம் சொன்னால் எச்சி தெறிக்கும்’ என்று அனிதாவிடம் சொன்னதை அனிதா கொஞ்சம் திரித்து பேசி ‘செய்தியாளர்கள் வணக்கம் சொன்னால் எச்சி தெறிக்குமா’ என்று கொஞ்சம் திரித்து பேசி ஒரு சின்ன பஞ்சாயத்தை ஆரம்பித்தார்.
அதே போல போட்டியாளர்களின் வாழ்க்கையில் நடத்த மகிழ்ச்சியான அல்லது மறக்க முடியாத அனுபவங்களை பகிருமாறு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்தார்.
அதில் வேல் முருகன் சிறு வயதில் தான் சாப்பாட்டிற்கு பட்ட கஷ்டத்தை கூறினார் சனம் ஷெட்டி தான் 22 அடியில் இருந்து விழுந்த கதையை கூறினார்.
நிஷா, கருப்பாக இருந்ததால் தனது வாழ்வில் பட்ட கஷ்டத்தை கூறினார். இது தான் நேற்றய நிகழ்ச்சியின் ஹைலைட்.
இப்படி ஒரு நிலையில் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எச்சில் பஞ்சாயத்தை இன்னமும் விடாமல் பேசுகிறார் அனிதா சம்பத்.
#Day3 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/LaYIxNi7pb
— Vijay Television (@vijaytelevision) October 7, 2020
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago