Kogilavani / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியாதான் இன்றையத் திகதியில், இரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகை.
இருக்கும் இரசிகர் பட்டாளத்தைப் பார்த்து, ஓவியாவை வைத்து படம் எடுக்க இயக்குநர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.
ஹர ஹர மகாதேவகி படத்தையடுத்து, கவுதம் கார்த்திக் நடிக்கும் காமடி படம் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து". இந்த படத்தில் ஓவியாவும் நடிக்க உள்ளாராம். படத்தின் தலைப்பை கேட்ட ஓவியா இரசிகர்களோ, இதில் இரட்டை அர்த்தம் வருகிறது என்று கூறியுள்ளனர்.
“எங்கள் தலைவிக்கு தமிழ் சரியாக தெரியாது என்பதால், அவருக்கு படத்தின் தலைப்பின் அர்த்தம் புரிந்ததோ இல்லையோ” என்கிறார்கள்.
காமெடி படத்தில் நடித்தால் ஓவியாவின் இமேஜ் கெட்டுவிடும் என்று, அவரது இரசிகர்கள் பயப்படுகிறார்கள். இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று, அவர்கள் ஓவியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி, 100 நாட்கள் நடந்து முடிந்த பிறகு, இரசிகர்களுடன் லைவ் சொட் செய்வதாக ஓவியா தெரிவித்துள்ளார்.
அப்போதும், இரசிகர்கள் கவுதம் கார்த்திக் படத்தில் நடிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 minute ago
9 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
11 minute ago