2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

காதல் கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி; ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சி

S.Renuka   / 2026 பெப்ரவரி 23 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்குத் திரையுலகின் இளம் ஹார்ட்‌த்ரோப் விஜய் தேவரகொண்டா மற்றும் ‘நேஷனல் கிரஷ்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஷ்மிகா மந்தனா இருவரும் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சி அளித்துள்ளனர்.

ரசிகர்கள் அன்புடன் சூட்டிய ‘ViRosh’ என்ற பெயரையே அவர்கள் தங்கள் திருமண விழாவுக்கும் தெரிவு செய்து, 'The Wedding of ViRosh' என பெயரிட்டுள்ளனர்.மேலும் சமூக வலைதளங்களில் பகிர்ந்த உணர்ச்சிப்பூர்வமான பதிவில், “நாங்கள் முடிவெடுக்கும் முன்பே, எங்களுக்கான பெயரை நீங்கள் தீர்மானித்து விட்டீர்கள்.

அந்த அன்பை நினைவாக வைத்துக்கொண்டு, எங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய நாளையும் ‘விரோஷ்’ என்றே அழைக்கிறோம். எங்களை இவ்வளவு நேசிக்கும் உங்கள் அன்பு எப்போதும் எங்களுடன் இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், திருமணத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாதபோதிலும், எதிர்வரும் 26-ஆம் திகதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து, மார்ச் 4-ஆம் திகதி ஹைதராபாத் நகரில் பிரம்மாண்டமான வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

முன்னதாக கீதா கோவிந்தா மற்றும் டியர் கமரேட் போன்ற வெற்றி படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, நீண்ட காலமாக காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில், தற்போது அதற்கு முத்திரை குத்தும் விதமாக திருமண அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X