2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கொரோனாவால் பிரபல நடிகர் ‘நிதிஷ் வீரா‘ மரணம்

Editorial   / 2021 மே 17 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனாத்  தொற்றினால் இன்று  உயிரிழந்துள்ளார்.

அண்மையில் கொரோனாத்  தொற்றுக்குள்ளான  நிதிஷ், சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில்  சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணி அளவில் உயிரிழந்தார்.

நிதிஷ் வீராவின் மரணம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .