2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை

Editorial   / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாலிவுட் பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான நோரா ஃபதேஹி, மும்பையில் சன்பர்ன் இசைத் திருவிழாவிற்குச் (Sunburn Festival 2025) சென்று கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கினார். அமெரிக்க டிஜே டேவிட் குட்டாவுடன் இணைந்து மேடையேறவிருந்த அவரை நோக்கி, மதுபோதையில் இருந்த கார் ஓட்டுநர் ஒருவர் அதிவேகமாகத் தனது காரை மோதினார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, நோரா உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சிடி ஸ்கேன் (CT Scan) பரிசோதனையில், உள் இரத்தக் கசிவு போன்ற பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும், பலமான மோதலினால் மூளை லேசான அதிர்ச்சி (Slight Concussion) ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையிலும், தனது தொழில்முறை கடமையை நிறைவேற்றுவதற்காக அவர் மீண்டும் மேடைக்குத் திரும்பினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X