Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓ.டி.டி. தளத்திலும் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு தனது 'ஏலே' பட காட்சிகளை திருடி இருப்பதாக இயக்குனர் ஹலிதா ஷமீம் குற்றம் சாட்டி உள்ளார்.
இவர் தமிழில் சில்லுக்கருப்பட்டி, பூவரசம் பீப்பி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். ஏலே படத்தில் சமுத்திரக்கனி நடித்து இருந்தார். ஹலிதா ஷமீம் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், "ஏலே படத்திற்காக முதன் முதலில் ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்கு தயார் செய்து அதில் அவர்களையும் நடிக்க வைத்தோம். அதே கிராமத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. இருப்பினும் நான் பார்த்து, பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இப்படம் முழுக்க களவாடப்பட்டு உள்ளது.
ஐஸ்காரர் என்றால் இங்கே பால்காரர். செம்புலி இங்கே செவலை. அங்கே அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது. ஏலே படத்தில் நடித்த கலைக்குழு பாடகர் பாத்திரம் போலவே, நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டியுடன் பாடிக் கொண்டிருக்கிறார்.
இரண்டு படங்களையும் ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய உள்ளன. நான் தேர்வு செய்த அழகியல் இரக்கமின்றி திருடப்படும்போது அமைதியாக இருக்கமாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
25 minute ago
32 minute ago