2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கவர்ச்சி உடையில் மாளவிகா

Freelancer   / 2023 ஒக்டோபர் 26 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளத்து பைங்கிளியான மாளவிகா மோகன், 'பட்டம் கம்பம்' என்கிற மலையாள படம் மூலம் அறிமுகமானார்  தமிழில் குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகும் வாய்ப்பு தான் இவருக்கு கிடைத்தது.

அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த, 'பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடி போட்டதன் மூலம்,  இவரின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டும் மாளவிகா மோகனன், தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், நடிப்பில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ள 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதை தொடர்ந்து, யுத்தரா என்கிற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களை விட, ஹிந்தி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டும் மாளவிகா மோகனன்... அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற தாமரை... தண்ணீரில் தவழ்ந்து கொண்டிருப்பது போல், கவர்ச்சிக்கு குறை வைக்காமல் இவர் எடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X